அடிக்கு மேல் அடியை சந்திக்கும் விஜய்… உடைந்தது ஒரு கை.. இனி நடக்கப்போவது என்ன?
விஜய் அரசியலுக்கு வருகிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானதில் இருந்தே விஜய்க்கு அடுத்தடுத்து சிக்கல்களும் தொடர்ந்தன.
விஜய் என்ன செய்தாலும், எது பேசினாலும் பிரச்சனை பண்ண வேண்டும் என்று ஒரு கூட்டம் சுத்தி கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தன்னுடைய அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் விஜய்.
ஏற்கனவே குறித்த நாளில் மாநாட்டை நடத்தாமல் அக்டோபர் 27ஆம் தேதிக்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்கு ஒப்புதல் அளிக்க விக்கிரவாண்டி போலீசார் தமிழக வெற்றி கழக கட்சியின் நிர்வாகிகளை அதிகமாகவே அலைக்கழித்து விட்டார்கள்.
எல்லாம் கைகூடி இன்னும் சில நாட்களில் மாநாடும் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
எல்லா மாவட்டங்களுக்கும் சென்று மாநாட்டிற்கு மக்களை திரட்டுவதில் தேனீ போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவருடைய நெருங்கிய நண்பரும் புதுச்சேரி மாநிலத்தின் தவெக நிர்வாகியுமான சரவணன் என்பவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்து இருக்கிறார்.
இந்த இறப்பு நிகழ்ச்சிக்கு வந்த புஸ்ஸி ஆனந்த் கதறி அழுதது ரொம்பவே நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்தது. இப்படி ஒரு நெருக்கடியான தருணத்தில் மாநாட்டிற்காக அடுத்து இவர் என்ன செய்வார் என்ற கவலை இப்போதே அந்தக் கட்சியினருக்கு வந்துவிட்டது.
மேலும் சரவணனின் இறப்பு குறித்து நடிகர் விஜய்யும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.
சரவணன் விஜய்யின் ரசிகர் மன்றத்திலிருந்து, அதன் பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து, தற்போது புதுச்சேரி மாநிலத்தின் தமிழக வெற்றிக்கழக கட்சி நிர்வாகியாக மாறி இருக்கிறார்.
தற்போது இவருடைய இழப்பு தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு புதுச்சேரி மாநிலத்தில் பின்னடைவாக கூட இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.