அமரனுக்காக ஆண்டவர் செய்த செயல்… இதெல்லாம் பார்க்காம இருக்க முடியுமா?
அமரன் படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது. முதல் முதலாக முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் மூக்குந் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம்.
பொதுவாக தமிழ் சினிமாவில் ராணுவம் சம்பந்தமான படங்கள் என்றாலே பல்லாவரம் மலைகளை காட்டிவிட்டு மிலிட்டரி கேம்ப் போல் காட்டிவிடுவார்கள். ஆனால் இந்த படத்தில் கிட்டத்தட்ட 65 நாட்கள் காஸ்மீரில் சூட்டிங் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல படங்கள் காஷ்மீரில் சூட்டிங் செய்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு படத்திலும் காட்டப்படாத பல இடங்களில் அமரன் படம் சூட்டிங் நடைபெற்றுள்ளது. எப்பொழுதுமே பாதுகாப்பு கருதி காஷ்மீரில் பல கட்டுப்பாடுகளை ராணுவத்தினர் போட்டுவிடுவார்கள்.
அமரன் படத்திற்காக கமல் பெரிய பெரிய உயர் அதிகாரிகளை பிடித்து காஷ்மீரில் நுழைய முடியாத இடத்தில் கூட நுழைத்திருக்கிறார். குறிப்பாக ஆர்மி கேம்பஸ் உள்ளேயே சென்று அமரன் படத்திற்காக சூட்டிங் எடுத்துள்ளனர். மேஜர் முக்குந்த் வரதராஜன் டிராவல் செய்த இடங்களுக்கெல்லாம் சென்று இருக்கிறார்கள்.
இப்படி இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத இடங்களை எல்லாம் இந்த படத்தில் அனுமதி வாங்கி காட்டி இருக்கிறார்கள். ராணுவம் பாதுகாப்போடு பல இடங்களுக்கு சென்று காட்சிகளை படம் பிடித்து உள்ளார்கள். மேஜர் முகுந்து வரதராஜன் தங்கிய இடம், உறங்கிய படுக்கை எல்லாவற்றையும் இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்.