மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி மரணம்
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கொஹொலன பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்காக ஆன்டெனாவை தயார் செய்து கொண்டிருந்த போது மின் கம்பியில் ஆண்டெனா குழாய் மோதியதில் மின்சாரம் தாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)