செய்தி

ஐதேகவின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும் – சஜித் கட்சி போர்க்கொடி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மகக்ள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

பொதுத் தேர்தலைக் கருத்திற் கொண்டு தம்முடனான தேர்தல் கூட்டணிக்கான நிபந்தனையாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை விட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய மகக்ள் சக்தியில் இணைய வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

“கட்சித் தலைவர் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க விரும்பும் ஒரு சிலர் சிறிகொத்தாவில் ஒரு சில கட்சி உறுப்பினர்களுடன் இருக்கட்டும், மற்றவர்கள் எங்களுடன் சேர வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இப்போது சிறந்த இடம் ஐக்கிய மகக்ள் சக்தியாகும். அத்துடன் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி கட்சியை எங்களிடம் கையளித்தால் ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

ரணிலிடம் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யுமாறு பலமுறை கூறியும் அவர் கோரிக்கையை செவிசாய்க்கவில்லை. ரணில் வெளியேறினால் ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் அது எமக்கு வழங்கப்படுமா என்பது சந்தேகம் என ராஜகருணா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அடிமட்ட மட்டத்தில் இருந்து திரு.விக்கிரமசிங்கவைத் தலைமைப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று தீர்மானங்களைப் பெறுவதற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கியுள்ளது. இது வார இறுதியில் காலி மாவட்டத்தில் ஆரம்பமானது.

இதேவேளை, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது எதிரணிக் கூட்டணியை உருவாக்குவதே சிறந்த வழி என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

(Visited 119 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!