பொழுதுபோக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தளபதி

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார் நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய்.

அக்டோபர் 27ஆம் தேதி விக்ரவாண்டியில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உறுதி அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சிக் கொடி மற்றும் கொடிப் பாடலையும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, தவெக மாநாடு விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி தவெக நடத்தப்படும் மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு கடிதம் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அதற்குப் பதிலளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநாடு தொடர்பாக காவல் துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பதில் அளிக்குமாறும், விளக்கம் அளிக்குமாறும் கூறியிருந்தனர். அவர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தவெக மாநாடு சிறப்பான மாநாடாகவும், வெற்றி மாநாடாகவும் நடைபெறும். இந்த மாநாட்டில் யார், யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த தகவலை தலைவர் விஜய் அறிவிப்பார். விக்கிரவாண்டியில் திட்டமிட்டபடி அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கி நடைபெறும் என்றார்.

https://x.com/tvkvijayhq/status/1836986153066467627

(Visited 49 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!