திடீரென நீ நான் காதல் சீரியலில் இருந்து விலகிய நாயகி…
விஜய் டிவியின் சீரியல் ஒன்றில் விலகியுள்ள நாயகி குறித்த தகவல் தான் இப்போது வலம் வருகிறது.
அதாவது விஜய் டிவி புதுமுகங்கள் சிலர் நடிக்க ஒளிபரப்பாகி வரும் தொடர் நீ நான் காதல். ஹிந்தி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கான ரசிகர்கள் இப்போது தான் அதிகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நீ நான் காதல் தொடரில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தவர் தான் சாய் காயத்ரி.

நடிப்பு மற்றும் சொந்த தொழில் என பிஸியாக இருந்து வந்தவர் தொடரில் இருந்து விலகியதாக கூறியுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக நீ நான் காதல் தொடரில் இருந்து விலகுவதாக அவர் பதிவிட ரசிகர்கள் உங்களை அனுவாக நாங்கள் மிஸ் செய்வோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

(Visited 83 times, 1 visits today)





