உலகின் மிகப் பெரிய சிலந்தி கண்டுப்பிடிப்பு : 07 எலிகளுக்கு சமம்!

உலகின் மிகப்பெரிய சிலந்தி இனங்காணப்பட்டுள்ளது. குறித்த சிலந்தியானது பொதுவாக இரவில் வளரும் திறன் கொண்டது எனவும், பறவைகளை உட்கொள்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோலியாத் பேர்டீட்டர் என்று பொதுவாக அறியப்படும் தெரபோசா ப்ளாண்டி, 11 அங்குல நீளம் வரை வளரும் திறன் கொண்டது. அதன் எடை 170 கிராம் ஆகும். சாராசரியாக ஏழு எலிகளின் அளவை ஒத்ததாக இதன் நிறை காணப்படுகிறது.
அதன் அளவு மற்றும் வலிமை இருந்தபோதிலும், சிலந்தியின் விஷம் மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல என ஆய்வளார்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அதன் கடியானது வேதனையானது மற்றும் படபடப்பு, குமட்டல் மற்றும் பிற விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
இது முதன்மையாக வட தென் அமெரிக்காவின் பரந்த மழைக்காடுகளில் வாழ்கிறது. குறிப்பாக அமேசான் மழைக்காட்டில் வாழ்கிறது.
(Visited 14 times, 1 visits today)