ஒரே பாடலில் கதறவிட்ட தலைவர் விஜய்.. தூள் கிளப்பிய விவேக், தமன்… பாடல் இதோ
எல்லா கட்சிகளுக்குமே கட்சிப் பாடல்கள் என்று உண்டு. அப்படித்தான் விஜய் தன்னுடைய கட்சி பாடலை இன்று வெளியிட்டார். பாடலோடு சேர்த்து சூசகமாக தமிழகத்தில் தன்னுடைய அரசியல் எப்படி இருக்கும் என்றும் சொல்லிவிட்டார்.
தமன் இசையில், கவிஞர் விவேக் வரிகளில் தமிழன் கொடி பறக்குது என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் சாயலில் பார்க்கும் பொழுது மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடலை போன்று தான் இருக்கிறது.
வீடியோவின் ஆரம்பத்தில் அரசர் ஒருவன் யானை மீது அமர்ந்து மக்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறான். அப்போது இரட்டை யானைகளோடு வரும் தலைவன் ஒருவன் மக்களை காப்பாற்றுவது போல் இருக்கிறது. தன்னுடைய கட்சியின் கொடியில் இரட்டை யானைகளை அமர்த்தி நடுவில் வாகை மலரை பூக்க வைத்திருக்கிறார்கள்.
அதே இரட்டை யானை, வாகை மலரை இந்த வீடியோவிலும் ஆரம்பத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் இரட்டை யானையின் பலம், வாகை மலரின் வெற்றி குறிப்பு, தமிழுக்காக இரத்தம் சிந்திய தியாகிகளின் ரத்த நிறம், பச்சை நிற வெற்றி திலகம், அதில் மங்களகரமான மஞ்சள் என தன்னுடைய கொடியின் விளக்கத்தை பாடலிலேயே கொண்டு வந்து விட்டார் விஜய்.
அது மட்டுமில்லாமல் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்கும் தலைவன் போல் இல்லாமல், தோளில் கை போட்டு ஆதரிக்கும் தலைவர்தான் விஜய் என வரிகள் இடம்பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அரசனே கேள்வி கேட்கும் தலைவனின் காலமிது, அன்னைக்கே சொன்னேனே இது ஆளும் தமிழனின் வெற்றி கொடி என ஒவ்வொரு வரியும் தமிழகத்தின் மாற்று அரசியலுக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது.
விஜய் துணிச்சலாக இந்த இரண்டு கட்சிகளை தான் நான் எதிர்க்க போகிறேன் என தன்னுடைய கட்சி பாடல் மூலமே தமிழக மக்களுக்கு உணர்த்திவிட்டார். இதுவரையிலும் தமிழ்நாட்டில் மாற்றுக் கட்சி என்ற ஒரு விஷயம் இல்லாததால் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கு மாத்தி மாத்தி ஓட்டு போட்டு வந்தார்கள்.
இப்போதுதான் சீமானின் நாம் தமிழர் கட்சி கொஞ்சம் தலை தூக்கி கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் தன்னை பெரிய மாற்று சக்தியாக விஜய் முன்னிறுத்தி இருக்கிறார். 2026 தேர்தலை நோக்கிய அவருடைய விரைவு பயணம் வெற்றிவாகை சூடுகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.