சொகுசு படகு சிசிலியில் மூழ்கியதில் ஒருவர் பலி ஆறு பேர் மாயம்
சிசிலிய தலைநகர் பலேர்மோவில் எதிர்பாராதவிதமாக வீசிய புயலால் ஆடம்பரப் படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார்
மற்றும் ஆறு பேரைக் காணவில்லை என்று இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பதிவு செய்யப்பட்ட 56 மீட்டர் நீளமுள்ள பாய்மரப் படகு 22 பேருடன் மூழ்கியதாக கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் பிரித்தானிய, அமெரிக்க மற்றும் கனேடிய நாட்டினர் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
சமீபத்திய நாட்களில் புயல் மற்றும் பலத்த மழை இத்தாலியை புரட்டிப் போட்டுள்ளது – வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் நாட்டின் வடக்கில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன –
மீட்கப்பட்ட 15 பேரில் ஒரு வயது குழந்தை உட்பட 8 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அனைவரும் சீராக இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு 49 மீற்றர் ஆழத்தில் காணப்பட்டதாகவும், கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
அருகில் உள்ள டெர்மினி இமெரிஸ் நகரத்தில் உள்ள வழக்குரைஞர்கள் என்ன தவறு நடந்துள்ளது என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
படகு சிசிலியன் துறைமுகமான மிலாஸோவில் இருந்து ஆகஸ்ட் 14 அன்று புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை பலேர்மோவின் கிழக்கே கடைசியாக கண்காணிக்கப்பட்டது,
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் பிரிட்டிஷ் அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பிரிட்டன்களுக்கு தூதரக ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.