நடிகர் மோகன்லால் திடீரென மருத்துவமனையில் அனுமதி

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் மோகன்லால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடுமையான காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மோகன்லாலை ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம்,
“64 வயதாகும் மோகன்லாலுக்கு, கடுமையான காய்ச்சல், முச்சுத் திணறல் மற்றும் தசை வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு சுவாச தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஐந்து நாட்கள் ஓய்வுடன் சிகிச்சை மேற்கொள்ளவும், பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
(Visited 20 times, 1 visits today)