காசாவில் 25 ஆண்டுகளுக்கு பின் போலியோ நோயாளி கண்டுப்பிடிப்பு!
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் உள்ள காசா பகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு போலியோ நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மத்திய காசாவில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் காரணமாக 11 மாதங்களாக தடுப்பூசி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் போலியோ நோய் பரவும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
போரின் இடைநிறுத்தத்திற்குப் பிறகு சுமார் 6,40,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை அவசரமாக தொடங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த போலியோ நோயாளி பதிவாகியிருப்பதும் சிறப்பு.
(Visited 4 times, 1 visits today)