உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள mpox தொற்று : விடுக்கபட்டுள்ள அவசர அழைப்பு!
ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கு தொற்று நோய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஒட்டுமொத்த உலகத்தின் நல்வாழ்வுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, மற்றொரு உலகளாவிய தொற்றுநோய்க்குள் நம்மைத் தள்ளக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசை (டிஆர்சி) தாண்டி பரவும் வழக்குகளின் எழுச்சிக்கு மத்தியில் உலக சுகாதார அமைப்பு சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஆப்பிரிக்காவில் 18,700 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் 500 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இது கடந்த ஆண்டில் பதிவாகிய எண்ணிக்கையை விட அதிகமாகும். இந்நிலையிலேயே சுகாதார அதிகாரிகள் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு பிறகு மீண்டும் ஒரு உலகளாவிய நெருக்கடியை மக்கள் சந்திக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.