உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கனேடிய வடகொரியா நிபுணர் சுவிட்சர்லாந்தில் கைது

கனடாவைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி, இப்போது வட கொரியா நிபுணராக பணிபுரியும் ஒருவர், சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பெயரிடப்படாத உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளது.
அதிகாரியின் முழுப் பெயர் வெளியிடபடவில்லை அத்துடன் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்படவில்லை மற்றும் அதிகாரிகள் அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)