கோட் படம் வெளியாகும் வரை கட்சி தொடர்பில் எந்த அறிவிப்பும் இல்லை – விஜய் அதிரடி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என த.வெ.க. தலைமை தகவல் தெரிவிக்கின்றன.
த.வெ.க.வின் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் வெளியாகும் வரை, த.வெ.க. தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
செப்.5ல் படம் வெளியான பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் தகவல்
(Visited 39 times, 1 visits today)