செய்தி விளையாட்டு

வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதியில் வென்று, இறுதிப்போட்டிக்கு நுழைந்தார்.

ஆனால், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், மல்யுத்தம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்தார்.

இதனால், வினேஷ் போகத்திற்கு இந்தியாவில் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், வினேஷ் போகத் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கடினமான நேரங்களே வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன. நீங்கள் தனியாக இல்லை. எது வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் நிற்கிறோம். உறுதியாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.

(Visited 37 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி