அமெரிக்காவில் மயங்கிவிழுந்த பேருந்து ஓட்டுநர் – பல மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவன்
அமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்குப் பாராட்டு மழை பொழிகிறது.
பாடசாலை பேருந்தின் ஓட்டுநர் திடீரென மயங்கிவிழுந்த பின்பு பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்திய
சிறுவனுக்கே இவ்வாறு பாராட்டு மழை பொழிகிறது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
பேருந்தில் 66 மாணவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது தமக்கு உடல்நலம் சரியில்லை என ஓட்டுநர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது காணொளியில் பதிவாகியிருக்கிறது.
திடீரென அவர் மயங்கிவிழுந்தபின் பேருந்து திசைமாறிச் செல்லத் தொடங்கியுள்ளது. உடனே டில்லன் ரீவ்ஸ் (Dillon Reeves) முன்னே வந்து பேருந்தைச் சரியான பாதைக்குக் கொண்டு சென்று நிறுத்தினார்.
பின்னர் அவசரச் சேவைகளைத் தொடர்புகொள்ளுமாறு அவர் சக மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. பலரின் உயிரைக் காப்பாற்றிய டில்லன் ஒரு ‘ஹீரோ’ என்று பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் மயங்கிவிழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.