கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை ரத்து செய்த நியூசிலாந்து!
ஏர் நியூசிலாந்து தனது 2030 கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை ரத்து செய்தது.
புதிய விமானங்களை தயாரிப்பதில் பின்னடைவு, மாற்று எரிபொருள் பற்றாக்குறை மற்றும் “சவாலான” ஒழுங்குமுறை மற்றும் கொள்கை அமைப்புகளை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
நியூசிலாந்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான தேசிய கேரியரின் இந்த நடவடிக்கையானது, பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பாதையில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை இலக்காகக் கொண்டிருப்பதாக ஏர் நியூசிலாந்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)