திடீரென பாவாடை தாவணிக்கு மாறிய கவர்ச்சிக்கன்னி யாஷிகா
																																		தனது 17வது வயது முதல் கலைத்துறையில் பயணித்து வரும் யாஷிகா ஆனந்த், கடந்த 2016ம் ஆண்டு வெளியான “கவலை வேண்டாம்” என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

தொடர்ச்சியாக கோலிவுட் உலகில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று மட்டுமே யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார்.

இறுதியாக தமிழில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான இயக்குனர் செல்வத்தின் “படிக்காத பக்கங்கள்” என்கின்ற திரைப்படத்தில், முன்னணி கதாபாத்திரம் ஏற்று யாஷிகா ஆனந்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக தமிழில் “இவன்தான் உத்தமன்”, “ராஜ பீமா”, “சல்பர்” மற்றும் “சிறுத்தை சிவா” உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை யாஷிகா ஆனந்த் தற்பொழுது நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பிக்பாஸ் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார். அது மட்டுமின்றி கவர்ச்சி படங்களை மட்டும் பகிர்ந்து வந்த யாஷிகா தற்போது திடீரென பாவாடை தாவனியில் படங்களை பகிர்ந்துள்ளார்.
 
 
 
        



                        
                            
