ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால் முக்கிய உள்கட்டமைப்பு சேதம்: உக்ரைன்
உக்ரேனின் வடகிழக்கு வட்டாரமான சுமியில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) கூறியுள்ளனர்.
முதற்கட்டத் தகவல்களின்படி, தாக்குதல்களில் யாரும் காயமடையவில்லை.அந்த வட்டாரத்துக்கான ராணுவ நிர்வாகம் அதன் டெலிகிராம் பதிவில் இதைத் தெரிவித்தது.
எந்த உள்கட்டமைப்பு சேதமடைந்தது என்று அப்பதிவில் குறிப்பிடப்படவில்லை.
இரவு நேரத்தில் ரஷ்யா எட்டு ஆளில்லா வானுர்திகளை அனுப்பியதாகவும் அவற்றில் ஏழு வானூர்திகளை உக்ரேனிய ஆகாயத் பாகாப்புக் கட்டமைப்பு அழித்துவிட்டதாகவும் உக்ரேனிய விமான படை அதன் டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ‘கேஎச்-69’ ஏவுகணை ஒன்றையும் ரஷ்யா பாய்ச்சியதாக அது கூறியது. இருப்பினும் உக்ரேனின் பதில் நடவடிக்கையால் அந்த ஏவுகணை அதன் இலக்கை எட்டவில்லை என்று கூறிய உக்ரேனிய ஆகாயப் படை அதுகுறித்த மேல்விவரங்களை வெளியிடவில்லை.