அறிவியல் & தொழில்நுட்பம்

செப்டம்பரில் வெளியாக உள்ள iPhone 16 சீரிஸ்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸை வரும் செப்டம்பர் மாதம் உலகளவில் அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற WWDC 2024-ன் போது ஆப்பிள் நிறுவனம் iPhone 16 சீரிஸில் சாஃப்ட்வேர் அப்டேட்டாக iOS 18 இடம்பெறும் என்று அறிவித்தது.

இந்த சாஃப்ட்வேர் அப்டேட் டிவைஸின் பல முக்கிய அம்சங்களை புதுப்பிக்கும். அந்த வகையில் வரவிருக்கும் ஐபோன் 16 சீரிஸ் பல விரிவான மாற்றங்களை கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இந்த சீரிஸிற்கான தேவை அதிகமாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் கருதுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றின்படி நடப்பாண்டில் விற்பனை செய்ய மட்டுமே சுமார் 90 மில்லியன் யூனிட் என்ற அளவில் ஐபோன் 16 சீரிஸ் டிவைஸ்களை ஆப்பிள் தயாரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் 15 சீரிஸுடன் ஒப்பிடுகையில், சுமார் 10 சதவீதம் அதிகம்.

ப்ளூம்பெர்க்கில் வெளியிடப்பட்ட அறிக்கையானது Apple Intelligence அம்சமானது வரவிருக்கும் iPhone 16 சீரிஸிற்கான தேவையை குறிப்பாக சீனா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் என நிறுவனம் எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பிரபல சீன ஸ்மார்ட் போன் நிறுவனங்களான Xiaomi மற்றும் Huawei போன்றவை ஏற்கனவே தங்கள் மொபைல்களில் AI திறன்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐபோன் 16 சீரிஸில் Apple Intelligence-ஆனது முழுமையாக வெளிவராமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ப்ளூம்பெர்க்கின் மற்றொரு அறிக்கை, ஆப்பிள் நுண்ணறிவுடன் புதுப்பிக்கப்பட்ட Siri, அடுத்த ஆண்டுதான் வெளியிடப்படும் என்றும் அதற்கு முன் எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. மெயில், நோட்ஸ், பேஜஸ் மற்றும் தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ் முழுவதும் டெக்ஸ்ட்டை ரீரைட் செய்யவும், ப்ரூஃப் ரீட் செய்ய , சமமரைஸ் செய்ய யூஸர்களுக்கு உதவும் ரைட்டிங் டூல்ஸ்களை Apple Intelligence வழங்கும். ரீரைட் அம்சமானது டெக்ஸ்ட்டின் வெவ்வேறு வெர்ஷன்களை வழங்கும், தேவைக்கேற்ப டோன்-ஐ சரிசெய்யும். கிராமரை சரிபார்க்க உதவும் ப்ரூஃப்ரீட் அம்சமும் உள்ளது.

அதே போல மற்றொரு Apple Intelligence அம்சத்தில், யூஸர்கள் இன்பாக்ஸின் மேலே உள்ள அர்ஜென்ட் இ-மெயில்ஸ்களை ஹைலைட் செய்யலாம். யூஸர்கள் முதல் சில வரிகளுக்குப் பதிலாக சம்மரிஸ்களை ப்ரிவ்யூ பார்க்கலாம். தவிர ஸ்மார்ட் ரிப்ளே, விரைவான பதில் பரிந்துரைகளை வழங்குகிறது. மேலும் ஆப்பிள் Genmoji அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது யூஸர்கள் டிஸ்கிரிப்ஷன்களை டைப்பிங் செய்வதன் மூலம் கஸ்டமைஸ்ட் emoji-க்களை உருவாக்க அனுமதிக்கிறது.

இந்த அம்சங்கள் அனைத்தும் ஐபோன் 16 சீரிஸில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், WWDC 2024 நிகழ்வின் போது குறிப்பிடப்பட்ட சில புதிய அப்டேட்ஸ்களுக்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்பதை ஆப்பிள் வெளிப்படுத்தியது. ஆப்பிள் நிறுவனம் புதிய Siri ஆப்ஸ்களில் உள்ள அனைத்து அம்சங்களையும் எவ்வாறு கமாண்ட் கொடுக்க முடியும் என்பதைப் பற்றி ஆப்பிள் விவாதித்தது.

உதாரணமாக AI-ன் உதவியுடன், Siri தனிப்பட்ட டாக்குமெண்ட்ஸ்களை ஓபன் செய்ய முடியும், ஒரு நோட்-ஐ மற்றொரு ஃபோல்டருக்கு நகர்த்தவும், மின்னஞ்சலை அனுப்பவும் அல்லது நீக்கவும், Apple News-ல் ஒரு குறிப்பிட்ட பப்ளிகேஷனை ஓபன் செய்யவும் முடியும். ஆனால் இந்த அப்டேட்ஸ் 2025-க்கு முன் வர வாய்ப்பில்லை.

 

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்