ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு உடனடியாக வேலை செய்வதற்கு அனுமதி வழங்க திட்டம்
ஜெர்மன் அரசாங்கத்தின் கூட்டு கட்சிகள் ஜெர்மன் நாட்டுக்குள் வந்த அகதிகளை உடனடியாக வேலை செய்வதற்குரிய அனுமதியை வழங்குவது பற்றி ஆலோசணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மன் நாட்டுக்குள் அகதி ஒருவர் அகதி விண்ணப்பத்தை மேற்கொண்ட பின்னர் 6 மாதங்கள் கடந்து இவர் தொழில் செய்வதற்கான அனுமதி பத்திரத்துடன் இந்த நாட்டிலே வேலைசெய்ய முடியும்.
இந்நிலையில் வெளிநாட்டு காரியாலயத்தில் நீண்ட காலமாக விண்ணப்பங்கள் முடங்கி காணப்படுவதால் அகதிகளுக்கு கிடைத்த சந்தர்ப்பமானது தவறவிடப்படுகின்றது.
இதனால் அரசாங்கம் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருந்தால் தொழில் வழங்குனர்கள் அகதியை, விண்ணப்பம் கோரிய ஒரு நபருக்கு தொழில் ஒப்பந்த பத்திரத்தை வழங்கவுள்ளது.
அதன் பின் வெளிநாட்டு காரியாலயத்தில் கையளிக்கப்பட்டு , வெளிநாட்டு காரியாலயம் 2 கிழமைகளுக்குள் விண்ணப்பம் தொடர்பான முடிவை எடுக்காது விட்டால், குறித்த நபரானவர் தொடர்ந்து இந்த நாட்டில் சட்ட ரீதியாக வேலை செய்ய அனுமதிக்கப்பட்டவராக கருதப்படுவார் என்ற வகையில் புதிய சட்டத்தை ஜெர்மனியின் ஆளும்கூட்டு கட்சியானது நிறைவேற்றவுள்ளது.
ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயிற்றப்பட்ட தொழிலாளர்களை இந்தியாவில் இருந்து பெருமளவில் ஜெர்மன் நாட்டுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.