பொழுதுபோக்கு

திடீரென அஜித்தை தேடிச்சென்றார் வெங்கட் பிரபு… என்னவா இருக்கும்?

2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் , திரிஷா, வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து வெளியானது மங்காத்தா திரைப்படம்.

இப்படம் அஜித்தின் 50- வது திரைப்படமாகும், இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்தது.

தற்பொழுது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார், படப்பிடிப்பு பணிகள் முடிந்தவடந்த நிலையில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக அமெரிக்காவில் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என கமெண்டிசில் பதிவிட்டு வருகின்றனர்.

https://x.com/vp_offl/status/1811083429166915703

(Visited 11 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!