இலங்கை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்

மறைந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் புகலுடல் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பந்தனின் புகழுடலுக்கு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் சம்பந்தனின் புகழுடலுக்கு எதிர்வரும் (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
(Visited 23 times, 1 visits today)