பி.சுசீலா அம்மா திருப்பதியில் செய்த செயலைப் பாருங்கள்…

1950 முதல் 1990 வரை தென்னிந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பின்னணிப் பாடகியாகத் திகழ்ந்தவர் பி சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும், 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கும் பி.சுசீலா, வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கிறார்.
தற்போது பி.சுசீலா, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்.
ஏழுமலையானை வழிபட்ட பின் கோவில் வளாகத்தில் இரண்டு பேரின் துணையுடன் நடக்கமுடியாமல் வந்த பி சுசீலா, நாராயண மந்திரம் என்ற பக்தி பாடலை மூச்சு இறைக்க பாடிக்கொண்டு வந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அவரின் தீவிர ரசிகர்கள் அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)