பொழுதுபோக்கு

இந்தியன் 2 படத்தில் ரஜினி? பல வருடங்களுக்குப் பின் நடந்த சம்பவம்

கமல் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தற்போது 28 வருடங்களுக்குப் பின் மறுபடியும் இந்தியன் தாத்தாவாக கலக்க தயாராகி விட்டார்.

அதாவது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து மறுபடியும் இக் கூட்டணி இணையும் வகையில் 22 வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு இந்தியன் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டது.

ஆனால் துவங்கியிலிருந்து பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த நிலையில் இப்பொழுது தான் முடிவு கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் வருகிற ஜூலை 12ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகப்போகிறது. இதை அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இப்படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் லைக்கா நிறுவனம் இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள்.

அந்த வகையில் இன்று இரவு 7:00 மணிக்கு ட்ரெய்லர் வர இருக்கிறது. இதை லைக்கா நிறுவனம் அவர்களுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சேனாதிபதியின் இதிகாச கதை உங்கள் பார்வைக்கு தயாராகி விட்டது என்று உற்சாகத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

இதில் ஒரு கார்ட்டூன் மாதிரி ஒரு முகம் இருக்கிறது. அதை சுற்றி மக்கள் அவர்களுடைய குறைகளை சொல்லி போராடும் வகையில் உரிமை குரல் காட்டப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்த கார்ட்டூன் கையில் ஏகப்பட்ட கன் இருக்கிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அந்த சஸ்பென்ஸ் ஆக இருக்கும் நபர் ரஜினியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் பரவுகிறது. அப்படி என்றால் பல வருடங்களுக்குப் பின் கமலுடன் ரஜினி இணைந்து ஒரு கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்றும் அது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டு இருக்கிறது என்றும் ரசிகர்கள் சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.

ஒருவேளை சங்கர் இந்த மாதிரியான வித்தியாசத்தை கொண்டு வந்து பிரம்மாண்டமாக ஆக்க வேண்டும் என்பதற்காக ரஜினியை ஒரு சில காட்சிகளில் நடிக்க வைத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் ரஜினி மற்றும் கமல் சேர்ந்து ஆடப்போகும் ஆட்டம் இந்தியன் 2 ஒரு சம்பவத்தை செய்யப்போகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!