பிரேம்ஜி – இந்து ஜோடியின் முதல் புகைப்படம் வெளியானது…

நடிகர் பிரேம்ஜி, இந்து என்ற பெண்ணை நாளைய தினம் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்யவுள்ளார். நெருங்கிய சொந்தங்கள் சூழ இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடக்க உள்ளதாகவும் விரைவில் இவர்களின் ரிசப்ஷன் நடக்க உள்ளதாகவும் முன்னதாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
நாளைய தினம் முருகன் கோயிலில் நடக்கவுள்ள இந்த திருமணத்தின் ஏற்பாடுகளை வெங்கட் பிரபு பார்வையிட்ட வீடியோ இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் பிரேம்ஜி மற்றும் இந்து ஜோடியின் புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் வைபவ் வெளியிட்டுள்ளார். இந்த ஜோடி பொருத்தத்தை ரசிகர்கள் பாராட்டியதுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
(Visited 34 times, 1 visits today)