வெளியானது இந்தியன் 2 “கதறல்ஸ்” பாடல் லிரிக்கல் வீடியோ

கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் கதறல்ஸ் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியம் 2 (Indian 2) படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கடந்த மே 1ஆம் தேதி இந்திய 2 படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
மொத்தம் ஆறு பாடல்களைக் கொண்ட இந்தியன் 2 பட ஆல்பத்தில் கதறல்ஸ் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
(Visited 22 times, 1 visits today)