யாழ்ப்பாணத்து தேவதை ஜனனிக்கு கிடைத்த மற்றுமொரு அதிரடி வேட்டை… பக்கத்துல யாருனு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.
ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், சில விளம்பரங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியிருந்தார்.
லியோவுக்குப்பிறகு சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கின்றார்.
அந்த வகையில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படம் ஒன்றிலும் ஜனனி நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
அதை உண்மையாக்கும் வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஜனனி. இந்த வாய்ப்பை வழங்கியதற்கு இயக்குனர் மிஸ்கின் அவர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.
(Visited 36 times, 1 visits today)