பொழுதுபோக்கு

”இனி ஹீரோவாகவே நடிப்பேன்” நச்சுன்னு பதில் கொடுத்த நடிகர் சூரி

*நடிகர் சூரி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கருடன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்கள் உடன் திரைப்படம் பார்ப்பதற்காக வந்த சூரி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

கேள்வி: கருடன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அது தொடர்பில் என்ன நினைக்கிறீகள்?

தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சியை முதல் அடுத்த அடுத்த காட்சிகளும் திரையரங்குகளில் முழுவதுமாக நிரம்பி விட்டது தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குடும்பம் குடும்பமாக வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி: காமெடியனாக நடித்த நீங்கள் ஹீரோவாக நடிக்கிறீர்கள் என வினவிய போது

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது வேறு ஒரு பயணத்தில் பயணிக்கிறோம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது நம்பிக்கையாக இருக்கிறேன் அடுத்தடுத்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன் இதற்கு காரணம் முதல் படத்தில் அறிமுகப்படுத்திய வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: அடுத்து காமெடி கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்பீர்களா?

ஹீரோ நன்றாக போய்க்கொண்டிருக்கிறது அப்படியே செல்வோம் கதைக்காக தான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: திரைப்பட நடிகர்கள் தொடர்ந்து சொன்ன நேரத்தை விட தாமதமாக வருவது குறித்து வினவிய போது

சொன்ன நேரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் நாகரிகம் ஆனால் அடுத்தடுத்து இடங்களில் சென்று வரும் பொழுது ஒவ்வொரு இடங்களில் தாமதம் ஆவது இறுதி இடங்களில் கடைசியாக மொத்தமாக தாமதம் ஆகிறது.

ஒன்று இரண்டு நபர்களிடம் நாம் கூறும் நேரம் கடந்து பத்திரிகையாளர்களை வந்து சேரும் பொழுது நேரம் தாமதமாகிறது என நான் கருதுகிறேன். சொன்ன நேரத்திற்கு வருவது தான் நாகரீகமானது என நான் நினைக்கிறேன்.

கேள்வி: போதுதேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

மக்களுக்குமான முடிவாக இருந்தால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

கேள்வி: தமிழ் ரசிகர்கள் காமெடியனாக பார்த்த உங்களை இனி காமெடியனாக பார்க்க முடியுமா?

காமெடியனாக நான் நடித்த பொழுது இருந்த ரசிகர்கள் இப்பொழுது ஹீரோவாக நடிக்கும் பொழுதும் வரவேற்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தொடர்ந்து கதைகளும் நன்றாக இருந்தால் நாம் கண்டிப்பாக நடிப்போம் காமெடியாக கதையும் நன்றாக இருந்தால் அதிலும் கண்டிப்பாக நடிப்பேன் ஹீரோவாக நடிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் காமெடியனில் கண்டிப்பாக நடிப்பேன்.

கேள்வி: தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பது குறித்து கேட்டபோது

என்னைப் பொறுத்தவரையில் கதை களத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறேன் என்னுடைய கதைக்கு சரியானதாக இருந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் உங்களுக்கும் ஒரு கதை அமைந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் நடிக்கலாம் நகைச்சுவை நடிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

சூரியின் இடத்திற்கு இன்னொரு நடிகர்கள் வருவார்கள் அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர்கள் வருவார்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் காமெடி நடிகராக வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை சசிகுமார் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது இப்பொழுது அவர் என்னுடைய படத்தில் நடிக்கும் பொழுது அவருடைய படத்தில் நடிக்கும் பொழுது என்ன மாதிரியான உணர்வுகள் இருந்ததோ அப்படியே தான் தனக்கு என்று இருக்கிறது. என்றார்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!