பொழுதுபோக்கு

ஹிந்தியில் ரீமேக்காகும் பரியேறும் பெருமாள் திரைப்படம் – வெளியான அறிவிப்பு

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள், சாதி கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார்கள்.

பின் நாட்களில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் கூர்மையான சமூக அரசியல் கருத்துக்களை கூறுவதற்கு பரியேறும் பெருமாள் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம்.

கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் சமீபத்திய படங்களில் தவிர்க்க முடியாத கிளாசிக் படமாக மாறியது. இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் குறித்து வெளியாகியுள்ளது.

Pariyerum Perumal 2018 Hindi Dubbed Movie | Kathir | Anandhi | Yogi Babu | Explain & Facts

ஹிந்தியில் சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தடக்’ திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை தயாரித்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் கதைக்களத்துடன் ஒத்துப்போவதால் ‘தடக்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘தடக் 2’ என்ற பெயரில் பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது என்ற அறிவிப்பை கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார்.

சித்தாந்த் சதுர்வேதி மற்றும் துருப்தி டிம்ரி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோவில் , கல்வி, கிளர்ச்சி, வகுப்பு மற்றும் ஜாதி பாகுபாடுகளுக்கு எதிரான பல முழக்கங்களைக் காண்பிக்கும் சுவர் ஓவியம் இடம்பெற்றுள்ளது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content