பொழுதுபோக்கு

மீண்டும் ஜீ தமிழுக்கு தாவிய பிரபல சீரியல் ஹீரோயின்… புது சீரியலுக்கான புது புரோமோ

ஜீ தமிழில் வெகுவிரைவில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது, ரேஷ்மா நாயகியாக நடிக்க நடிகர் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார்.

ப்ரோமோ வீடியோவில் டிராபிக் சிக்னலில் 2 வீலரில் காத்திருக்கும் ரேஷ்மா பக்கத்தில் நிற்கும் கார் கண்ணாடியை பார்த்து நெற்றியில் பொட்டு வைக்க ஜன்னலை ஓபன் செய்த ஜெய் ஆகாஷ் கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்லையா? இது என்ன உங்க வீட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள்னு நினைசீங்களா என்று கோபப்படுகிறார்.

உடனே ரேஷ்மா ஹலோ நான் நெத்தியில் தானே பொட்டு வச்சேன், என்னமோ உங்க நெத்தியில் வச்சா மாதிரி பேசுறீங்க என்று பதிலடி கொடுக்க ஜெய் ஆகாஷ் சரியான திமிர் பிடிச்சவளா இருப்பா போல என்று ஆவேசப்படுகிறார்.

திமிர் பிடிச்சவளா? திமிர் பிடிச்சவ என்ன பண்ணுவா தெரியுமா? என்று கிரீன் சிக்னல் விழுந்ததும் பைக்கை கொண்டு போய் கார் முன்னாடி நிறுத்தி வம்பிழுத்து ஜெய் ஆகாஷ் கீழே இறங்கி வந்ததும் வண்டியை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆகுகிறார்.

இந்த சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ள ரேஷ்மா ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்கிற சூப்பர்ஹிட் சீரியல் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலில் நடித்த அவர் தற்போது மீண்டும் ஜீ தமிழுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 24 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!