உக்ரைன்-ரஷ்யா போருக்குச் சென்ற இலங்கையர்கள் 288 பேர் தொடர்பில் வெளியான தகவல்
உக்ரைன்-ரஷ்யா போருக்கு இந்த நாட்டில் இராணுவ வீரர்களை கடத்தியமை தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய-உக்ரைன் போரின் கூலிப்படையாக இந்த நாட்டின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஆள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில நாட்களாக பல தகவல்கள் வெளியாகின.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட ஏனைய சந்தேகநபர்கள் குழுவொன்று ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மோசடியில் நாட்டின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் மேலும் சிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.