ஹாங்காங் உளவுத்துறைக்கு உதவியதாக மூவர் மீது குற்றச்சாட்டு! சீனத் தூதருக்கு சம்மன் அனுப்பிய பிரித்தானியா
ஹாங்காங்கின் உளவுத்துறைக்கு உதவியதாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, சீனாவின் தூதருக்கு பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது.
Zheng Zeguang உடனான ஒரு சந்திப்பில், வெளியுறவு அலுவலக அதிகாரிகள் சைபர் தாக்குதல்கள் உட்பட சீனாவின் “சமீபத்திய நடத்தை முறையை” கண்டித்தனர்.
நேற்று திங்கட்கிழமை இங்கிலாந்தில் மூன்று ஆண்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.
ஹாங்காங், பிரித்தானிய அதிகாரிகளுக்கு குற்றச்சாட்டுகள் பற்றிய “முழு விவரங்களை” வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
ஹாங்காங் ஒரு சிறப்பு நிர்வாக பிராந்தியமாக செயல்படும் சீனா, நகரின் உளவுத்துறை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
மேலும், சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ஹாங்காங்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை “புனைவு” மற்றும் “அவசியமற்ற குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.