இலங்கை

இலங்கை மக்கள் மத்தியில் அமைதியின்மை – மஹிந்த கூறும் காரணம்!

அரசாங்கத்திற்குச் சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் செலவீனங்களைக் குறைத்தல் மற்றும் அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பதன் மூலம் நாட்டுக்கு உற்பத்தி பலன் கிடைக்காது என்பதை தனியார்மயத்திற்கு ஆதரவான தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர்,  அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அல்லது வர்த்தகங்களை விற்பனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட வேண்டுமென வலியுறத்தியுள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!