அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
அஸ்ட்ராஜெனெகா பிஎல்சி தனது கோவிட்-19 தடுப்பூசியை சந்தையில் இருந்து அகற்றியுள்ளது.
வைரஸுக்கு எதிராக உலகைப் பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆரம்பத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
எனினும் தற்போது கோவிட் வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை திரும்பப் பெற தொடர்புடைய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தடுப்பூசி இனி தயாரிக்கப்படாமலோ அல்லது வழங்கப்படாமலோ இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் வாக்ஸெவ்ரியா என்ற தடுப்பூசிக்கான சந்தைப்படுத்தல் அங்கீகாரம் இந்த வாரம் நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் திரும்பப் பெறப்பட்டது என்று அஸ்ட்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த முடிவு பாதுகாப்பு காரணங்களுடன் தொடர்புடையது அல்ல என்று அது கூறியது.
எனினும் தடுப்பூசிக்குப் பிறகு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசியை திரும்பப் பெற தொடர்புடைய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் தடுப்பூசியை உருவாக்கியது.
கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற பிறகு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை உறுதிப்படுத்திய உடன், உலகம் முழுவதும் நிறைய விவாதங்கள் நடந்தன.
அதன்படி, உலகளவில் விநியோகிக்கப்பட்ட அந்த தடுப்பூசிகளை மீண்டும் கொண்டு வர அஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்றவர்களில், பக்கவிளைவுகளுக்கு ஆளானவர்களில் பலர் இரத்தக் கட்டிகளால் பாதிக்கப்பட்டு அவர்களில் சிலர் இறந்தனர் என்பது இப்போது நீதிமன்றத்தின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் 40 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசியை 18 வயது முதல் 99 வயது வரை பெற்றவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகிறது.
இந்த AstraZeneca தடுப்பூசி இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி CoviShield என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இந்த தடுப்பூசி இந்தியாவில் இருந்து பல ஆசிய நாடுகளுக்கு கோவிட் காலத்தில் நன்கொடையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.