தமிழ்நாடு

தமிழ் நாட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த தாதியால் ஏற்பட்ட விபரீதம்!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா(24), சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரு வருடமாக தாதியாக வேலை பார்த்து வருகிறார்.

வினிஷா, செல்வமணி என்பவரை காதலித்து வந்தார். செல்வமணி(29) மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர்.சென்னையில்தான் இவரும் வேலை பார்த்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷாவும், மதுரையை சேர்ந்த செல்வமணியும் சென்னையிலேயே வேலை பார்ப்பதால், இருவரும் திருமணம் செய்யாமல் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்..

இதனால் கருத்தரித்த வினிஷா, ஏழு மாத கர்ப்பிணியாக தனியே தடுமாறி வந்துள்ளார். நேற்று திடீரென இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தானொரு தாதி என்பதால் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அதன்படி குளியலறைக்குச் சென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

Geboortefotografie | Geboortefotograaf Utrecht - Oh Beautiful World

சிசுவின் கால் தட்டுப்பட்டுவிட்டால், ஒரேயடியாக வெளியே இழுத்துவிடலாம், அதற்கு பிறகு வலி குறைந்துவிடும் என்று நினைத்தார். இதற்காக கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து, ஓங்கி இழுத்தார்.எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் அவரால், பிரசவம் எளிதாக செய்து கொள்ள முடியவில்லை. பிரசவ வலியும் அதிகரித்தது. அந்த வலியையும் வினிஷாவால் பொறுக்க முடியாமல், பிரசவமும் எளிதில் முடியாமல், கடும் அவஸ்தைக்கு ஆளானார்.

வலி பொறுக்க முடியாமல், வலுவாக இழுத்ததால், சிசுவின் கால்கள் பிய்ந்துவிட்டது.. தனித்தனியாக கால்கள் பிய்ந்துக்கொண்டு வந்தது. அந்த குழந்தையும் பேச்சு மூச்சின்றி வெளியே வந்து விழுந்தது. இதற்கு பிறகு, குழந்தையின் கால்களை அதே பாத்ரூமில் வீசிவிட்டு, பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்

அங்கு வைத்தியர்கள் பரிசோதித்துவிட்டு, குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குள் வினிஷாவின் உடல்நிலையும் மோசமாகிவிட்டதால், அங்கேயே அவருக்கு தீவிர சிகிச்சையும் ஆரம்பமானது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், மாம்பலம் பொலிஸூக்கு தகவல் தந்தது. பொலிஸாரும் வினிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வினிஷாவுக்கு இன்னும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்