நியூயார்க்கில் காசா மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்கள்!
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் காசாவில் போர் நிறுத்தம் கோரி அங்கு அமைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன கூடாரங்களில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
குறித்த உத்தரவை மீறி அங்க தங்கியிருந்த மாணவர்களை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்தே போராட்டம் வலுப்பெற்றுள்ளது.
டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் செவ்வாய்க் கிழமை அதிகாலை பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் மண்டபத்தை ஆக்கிரமித்து, நுழைவாயில்களைத் தடுத்து, ஜன்னலுக்கு வெளியே பாலஸ்தீனக் கொடியை இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)