ஈராக்கின் டிக் டாக் பிரபலம் சுட்டுக்கொலை

ஈராக்கின் டிக் டாக் சமூக வலைதளங்களில் பிரபலமான ஓம் ஃபஹத் என்ற பெண் கொல்லப்பட்டுள்ளார்.
கிழக்கு பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் ஃபஹத்தை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டதாக உள்ளூர் போலீசார் கூறுகின்றனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் ஆரம்பித்துள்ளனர்.
டிக் டாக் சமூக ஊடகங்கள் மூலம் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரான வீடியோக்களை பகிர்ந்ததற்காக ஓம் ஃபஹத்துக்கு அந்நாட்டு நீதிமன்றம் முன்பு 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
(Visited 30 times, 1 visits today)