தன் திருமண ஆடையை அடையாளமே தெரியாமல் மாற்றியமைத்த சாம்
திருமணத்தின் போது தான் அணிந்திருந்த உடையை விருது விழா ஒன்றிற்காக நடிகை சமந்தா ரீ-யூஸ் செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகையாக மட்டுமல்லாது, தனது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாழ்க்கைமுறையை முன்னெடுத்து, பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் சமந்தாவுக்கு Elle (India) மேகசின் ’ELLE Leaders of Change, Female’ என்ற விருதை வழங்கியுள்ளது.
நடிகர்கள் நாக சைதன்யா- சமந்தா திருமணம் கடந்த 2017ல் கோவாவில் இந்து- கிறிஸ்டியன் வழக்கங்கள் படி நடந்தது. இதில் கிறிஸ்டியன் முறைப்படி நடந்த திருமணத்தில் நடிகை சமந்தா வெள்ளை நிற வெட்டிங் கவுன் அணிந்திருந்தார். ஆனால், திருமணம் முடிந்த நான்கே வருடங்களில் இந்த ஜோடி தங்கள் பிரிவை அறிவித்தது. தற்போது இருவரும் தங்கள் கரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், நடிகை சமந்தா அந்த வெள்ளை நிற வெட்டிங் கவுனை விருது விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கருப்பு நிறத்திலான ஸ்டிராப்லெஸ் உடையாக மாற்றி இருக்கிறார்.இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘புதிய நினைவுகளை உருவாக்க முடியும். சொல்வதற்குக் நிறைய கதைகள் இருக்கிறது. புதிய நினைவுகளை உருவாக்கவும் மற்றொரு புதிய கதையை உருவாக்கவும் இந்த உடைக்கு புது வடிவத்தைக் கொடுத்துள்ளோம்’ என உடையை டிசைன் செய்த சமந்தாவின் நண்பர் பஜாஜ் கூறியுள்ளார்.
இந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘இது எனக்குப் பிடித்த கவுன். இதை நான் ரீ யூஸ் செய்திருக்கிறேன். இது பலருக்கு முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால், எனது பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கும், எனது வாழ்க்கை முறையை மேலும் நிலையானதாக மாற்றுவதற்கும் நான் மனப்பூர்வமாக எடுத்துக்கொண்டிருக்கும் பல வழிகளில் எனது பழைய ஆடைகளை மீண்டும் உருவாக்குவதும் ஒன்று.இதுபோன்ற ஒவ்வொரு சிறிய செயலும் முக்கியமானது. இது நாம் வாழும் பூமிக்கு நாம் செய்யும் சிறிய நல்லது. நீங்களும் இதை முன்னெடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார் சமந்தா.
சமீபத்தில் ஷோபிதா துலிபலாவுடன் நாகசைதன்யா அவுட்டிங் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் இப்போது சமந்தா தனது திருமண உடையை இப்படி மாற்றியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
https://www.instagram.com/reel/C6MO0SvCsw0/?utm_source=ig_web_copy_link