ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்!
மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் இன்று (25.04) 100 க்கும் மேற்பட்ட நீண்ட துடுப்பு பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளதாக திமிங்கல ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த திமிங்கலங்களில் 31 திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஆராய்ச்சியாளர் இயன் வைஸ் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன் சேர்ந்து அவற்றை மீட்டதாக தெரிவித்துள்ளார்.
திமிங்கலங்கள் கரையொதுங்குவதற்கு என்ன காரணம் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை, இருப்பினும் மெதுவாக சாய்வான, மணல் நிறைந்த கடற்கரைகளால் அவற்றின் இருப்பிட அமைப்புகள் குழப்பமடையக்கூடும் என்றும் அதனால் அவை கரையொதுங்கிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)