இலங்கையில் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து – 2 போட்டியாளர்கள் கைது!
தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற Foxhill Supercross கார் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஏற்பட்ட குறித்த விபத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 8 வயதுடைய சிறுமியொருவரும் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 25 times, 1 visits today)





