இலங்கை செய்தி

அனுரகுமாரவை ஜனாதிபதியாக்க திட்டமிடும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இணைய சேனலுடன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்டிலான் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றாகத் தெரியும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் நாட்டை வேறொரு நிலைக்கு கொண்டு செல்லும் குழுவொன்றை காண்பதே ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும் என டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜபா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் முன்னேற்றத்தை அதே நிலையில் தக்கவைக்க முடியும் எனவும், எனவே அனுர திஸாநாயக்க தலைமையிலான ஒரு சக்தியே சிறந்த தெரிவு என ரணில் விக்கிரமசிங்க நம்புவதாகவும் டிலான் பெரேரா இங்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக அநுர திஸாநாயக்க தோல்வியடைந்ததன் பின்னர் ரணில் விக்ரமசிங்க எவ்வாறு நாட்டை மீட்டெடுத்தார் என்பதை நாட்டு மக்கள் நம்புவார்கள்

அதன்படி ரணில் விக்கிரமசிங்கவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!