மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஈரான் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (19) ஆசிய சந்தைகளில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3% அதிகரித்து, 90 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
அதே நேரத்தில் US West Texas Intermediate ஒரு பீப்பாய்க்கு 1.75% உயர்ந்து $84.1 ஆக இருந்தது.
அதேநேரம், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முதன்முறையாக 2,400 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதேவேளை ஜப்பான், ஹொங்கொங் , தென் கொரியா ஆகிய நாடுகளில் பங்குச் சந்தை சரிந்துள்ளதாகவும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)