GOAT-க்கு விசில் போடு… தளபதி குரலில் – முதல் சிங்கள் வெளியானது…

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படத்தின் சிங்கள் பாடல் வெளியாகி உள்ளது.
இதில், தளபதி விஜய் இரு வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடி த்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகின் மூத்த நடிகர்களான பிரசாந்த் மற்றும் பிரபுதேவா, நடிகைகள் லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படத்திலிருந்து தற்பொழுது முதல் சிங்கள் பாடல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் அவர்களுடைய குரலில், மதன் கார்க்கியின் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இந்த பாடல் ஒரு மிகச் சிறந்த பாடலாக உருவாகியுள்ளது. தற்பொழுது தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)