ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல்கள் விற்பனை
ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களை தங்க வைப்பதற்காக டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தால் வாங்கப்பட்ட ஹோபார்ட்டில் இரண்டு ஹோட்டல்கள் விற்கப்பட உள்ளன.
கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர் இருந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை எட்ட முடியாது என்று டாஸ்மேனியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதனால் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த இரண்டு ஹோட்டல்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மத்திய ஹோபார்ட்டில் தனக்குச் சொந்தமான பல கட்டிடங்களை விற்று, அந்த நிதியைப் பயன்படுத்தி சாண்டி பே வளாகத்தில் உள்ள கட்டிடங்களைச் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாஸ்மேனியா பல்கலைக்கழகம், மத்திய ஹோபார்ட்டில் வாங்கிய இரண்டு ஹோட்டல்களை விற்பனை செய்வதாகக் கூறுகிறது, ஏனெனில் எதிர்காலத்தில் அதிகமான சர்வதேச மாணவர்களை எடுத்துக்கொள்ளும் திட்டம் இல்லை.
மிட் சிட்டி மற்றும் பவுண்டன் சைட் ஹோட்டல்கள் சர்வதேச மாணவர்களை தங்க வைப்பதற்காக $42.26 மில்லியனுக்கு வாங்கப்பட்டன.
இதனால், 174 அறைகள் கொண்ட இந்த விடுதிகள் மறுவிற்பனை செய்யப்படுவதால், பல ஆண்டுகளாக அவை மாணவர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்படாமல் உள்ளன.
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2019 இல் 6,322 இல் இருந்து 2022 இல் 3,769 ஆக 40 சதவீதம் குறைந்துள்ளதாக டாஸ்மேனியா பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.