ஈரானின் பகிரங்க எச்சரிக்கை!! அமெரிக்காவும், இஸ்ரேலும் பதற்றம்
இராணுவ பயிற்சிக்காக தமது வான்பரப்பை தற்காலிகமாக மூடுவதாக சடுதியாக ஈரான் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பெரும் பரபரப்புடன் அலேட்டாகி வருகின்றன.
இஸ்ரேல் மீது ஏதோவொரு திடீர் தாக்குதலை முன்னெடுப்பதற்கான நகர்வாகவே அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகள் இதனை பார்க்கின்றன.
ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பை இன்னும் உசுப்பேற்றி விடும்படியாக வடகொரிய தலைவர் கிம்ஜோன் உங்க் “இதுதான் யுத்தத்திற்கு பொருத்தமான சிறந்த தருணம்” என வெளியிட்ட அறிவிப்பால் அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி மத்தியகிழக்கு நாடுகளும் குழம்பிப்போய் உள்ளன.
இதேவேளை இஸ்ரேல் மீதான எந்தவொரு தாக்குதல் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டாமென UAE, KSA, JORDAN, QATAR, EGYPT உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் ஈரானிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
உண்மையாகவே இஸ்ரேலை அழித்தொழிக்க ஈரான் தனது உச்சக்கட்ட ஆயுத பலத்தையும் இங்கே பிரயோக்கிக்கப்போன்றதா அல்லது கிள்ளிவிட்டு வருத்தப்பட போகும் வாய்ச்சவாடலா என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
சிரியாவில் இஸ்ரேலிய உளவுத்தாக்குதலில் அண்மையில் கொல்லப்பட்ட மற்றுமொரு மிகப்பெரிய தனது இராணுவ அதிகாரியின் இழப்பை ஈடு செய்யவே ஈரான் இவ்வாறு பதறுகிறதா என்பதும் தெரியவில்லை.
இதேவேளை “இஸ்ரேல் மீது கை வைத்தால் இஸ்ரேலை நாம் பாதுகாப்போம்” என பைடன் நேற்று அறிவித்தார்.
“எம்மீது தாக்குதல் நிகழ்ந்தால் ஈரானின் அணுஆலைகள் மீது நாம் பதிலடி கொடுப்போம்” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
“எமது அணுஆலைகளில் கை வைத்தால் 4 நிமிடங்களில் இஸ்ரேல் அழிக்கப்படும்” என ஈரான் அதிபர் எச்சரித்துள்ளார்.
இதுவரை காலமும் மேற்கத்திய சதிவலைகளுக்குள் அகப்பட்டு விடாமல் மிக லாவகமாக தமது நாட்டை பாதுகாத்து கொண்டிருப்பவை ஈரானும், துருக்கியுமே.
எனினும் ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கைகள் இஸ்ரேல் அழிவதற்கான முன்னோட்டமா அல்லது இன்னும் நாள் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்தே காண வேண்டும்.