போருக்கு ஆயத்தமாகவும் – கிம் ஜாங் உன் விடுத்த உத்தரவால் அதிர்ச்சி
போருக்கு ஆயத்தமாக வேண்டிய காலம் இது என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
இதனை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் ராணுவப் பல்கலைக்கழகத்தை ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளதால், கடந்த காலத்தை காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவப் பயிற்சிகளை அதிகளவில் மேற்கொள்வதை குற்றஞ் சாட்டியுள்ள வட கொரியா, இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
போருக்கு தயாராகும் முன்னேற்பாடாக வட கொரியா ஏவுகணைகள் பரிசோதனையை அதிகளவில் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)