பொழுதுபோக்கு

பாட்காஸ்ட் ஷோவில் ரசிகர் கேட்ட கேள்வி… நாசூக்காக பதில் சொன்ன சமந்தா!

உங்கள் அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள் என எனக்குச் சொல்ல வேண்டும்” என ரசிகர் ஒருவர் சமந்தாவின் சமீபத்திய வீடியோவில் கமென்ட் செய்து கேட்டிருந்தார். இதற்கு இப்போது சமந்தா நாசூக்காக பதில் கொடுத்திருக்கிறார்.

சமூகவலைதளங்களில் நடிகை சமந்தா மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அண்மையில் அவர் மையோசிடிஸ் நோய் பாதிப்பிற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார். இந்த பிரேக்கில் தன் உடல்நலன் குறித்தான பாட்காஸ்ட் ஒன்றை ‘டேக் 20’ என்ற பெயரில் தொடங்கினார். அதில் தனது நண்பரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷூடன் இணைந்து ஒவ்வொரு டாபிக்கிலும் பேசி வருகிறார் சமந்தா.

அதில், தனது காலை நேரத்து ரொட்டீன் குறித்து பேசியிருந்தார் சமந்தா. அதில் தான் ரசிகர் ஒருவர், “உங்கள் அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள் என சொல்லுங்கள்” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு சமந்தா நேரிடையாக பதில் சொல்லாமல், “மன்னித்து விடுங்கள்! நான் வீடியோவில் பேசியிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உதவாது என்று நினைக்கிறேன். இதைவிட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும். வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற கமென்ட்டுக்கு சமந்தா ஏன் பதில் கூற வேண்டும் எனவும் நடந்தது என்ன என்று தெரியாமல் எப்படி இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்றும் பலரும் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சீக்கிரம் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கும் சமந்தா அட்லி-அல்லு அர்ஜூன் இணையும் படத்திலும் ‘தளபதி 69’ படத்திலும் கதாநாயகிகள் பட்டியலில் பரீசலனையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content