இந்தியா

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை: மக்களிடம் ராகுல் காந்தி விடுத்துள்ள கோரிக்கை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியனின் குரல், உங்கள் எண்ணங்களை சமூக ஊடகங்களில் பகிரவும்” என்று காங்கிரஸ் தலைவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொலியில் பேசியிருப்பதாவது, நள்ளிரவில் இந்த காணொலியை பதிவு செய்துள்ளேன். ஆனால் இப்போது தான் அதை வெளியிட்டுள்ளேன். ஏனெனில், இது மக்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான ஒன்று. ஆம், ஒவ்வொரு இந்தியரின் குரலாகக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒலிக்கிறது.

தெலுங்கானா போராட்டத்தில் இருந்து திரும்பிய பிறகு தான் இந்த வீடியோவை உருவாக்கியதாகவும், இது ஒரு “புரட்சிகரமான” தேர்தல் அறிக்கை என்று பலர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ராகுல் கூறினார்.

தேர்தல் அறிக்கையை வடிவமைக்க உதவிய மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) தலைமையகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கை, அதன் ‘ஐந்து தூண்கள்’ மூலம் நீதிக்கான கட்சியின் உறுதிப்பாட்டை மையமாகக் கொண்டது.

மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும். முடிவுகள் ஜூன் 4ஆம் திகதி அறிவிக்கப்படும்.

(Visited 17 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே