சிட்னியில் வெள்ளத்தில் மூழ்கும் நகரங்கள் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிகை!
சிட்னியில் சடுதியான வானிலை மாற்றம் குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (06.4) காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நகரின் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியதுடன், நீர் விநியோகம் தடைபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரகம்பா அணை கொள்ளளவை எட்டியது. இது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கீழே 200 ஜிகாலிட்டர்களை வெளியேற்றியுள்ளது.
இருப்பினும் சிட்னியின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ளம் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹாக்ஸ்பரி ஆற்றில் ஒரே இரவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.
வின்ட்சரில் நீர்மட்டம் ஒரே இரவில் 9.5 மீட்டராகவும், ரிச்மண்டில் 12 மீட்டராகவும் பதிவாகும் என ஏதிர்வுகூறப்பட்டுள்ளது.
சிட்னியைச் சுற்றியுள்ள 1405 குடியிருப்புகளில் உள்ள குறைந்தது 3608 பேர் வெளியேற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஏறக்குறைய 1500 வீடுகளில் மின்சாரம் இல்லை, அணுக முடியாத இடங்களில் உள்ளவர்களுக்கு ஒரே இரவில் மின்சாரம் இல்லாமல் போகும் என்று எரிசக்தி நிறுவனங்கள் கூறுகின்றன.